மலைவேல் ஹெர்பல்ஸ்- கீழாநெல்லியின் நன்மைகள்

 

கீழாநெல்லி:



மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட பலவிதமான தலையாய பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது. இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.

சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும். இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.

உணவாக: 

கைப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவை யைப் பரிசளிக்கும் கீழாநெல்லி, குளிர்ச்சியை வாரி வழங்கும் இயற்கையின் ‘குளிர்சாதனப் பெட்டி’. மோரில் கறிவேப்பிலைப் பொடியையும் கீழாநெல்லிப் பொடியையும் கலந்து அருந்த, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்க, அரிசிக் கஞ்சியுடன் கீழாநெல்லியை அரைத்துக் கொடுக்கும் வழக்கம் மலைக் கிராமங்களில் உண்டு.

கீழாநெல்லியோடு சீரகத்தைச் சேர்த்து தயிரில் அடித்து ‘லஸ்ஸி’ போல் பருக, வேனிற் காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், கண்ணெரிச்சலுக்கான தீர்வு கிடைக்கும். உணவின் மீது வெறுப்பு கொள்ளும் ‘அன்னவெறுப்பு’ குறி குணத்துக்கு, கீழாநெல்லி, கடுக்காய், மிளகு ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து பருகலாம். கீழாநெல்லியை அரைத்துத் தயிரில் குழைத்துச் சாப்பிடுவதை, வெப்ப நோய்களைத் தடுக்கும் கற்ப முறையாக வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

மருந்தாக: 

கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது. உடல் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவு, கல்லீரலைப் பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக இன்றைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கல்லீரலைக் குறிவைக்கும் வைரஸ்களின் பெருக்கத்துக்குக் காரணமான நொதியைத் தடுத்து நிறுத்தும் வீரியம் கீழாநெல்லிக்கு இருக்கிறது. செரிமானத்துக்கு உதவும் சுரப்புகளை அதிகரிக்கச் செய்யும் கீழாநெல்லி, செரிமானக் கருவிகளைத் திறம்படச் செயல்பட வைக்கும்.

வீட்டு மருந்தாக: 

கரிசாலை, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை ஆகியவற்றைக் கொண்டு மிளகு, சின்ன வெங்காயத்தின் உதவியுடன் செய்யப்படும் கலவைக் கீரைச் சமையலை ருசிப்பதன் மூலம் செரியாமை, மலக்கட்டு, ரத்தக் குறைவு, தோல் நோய்கள் போன்றவை குணமாகும். விஷமுறிவு மருத்துவத்திலும் கீழாநெல்லி முக்கியத்துவம் பெறுகிறது. மங்கிய பார்வைக்கு ஒளிகொடுக்க, கீழாநெல்லியோடு பொன்னாங்கண்ணி கீரையைச் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். ‘பித்தவிடம் விழியின் நோய்க்கூட்டம்…’ எனும் சித்த மருத்துவப் பாடலின் மூலம் கீழாநெல்லியின் மகிமையை உணரலாம்.

காணும் யாவும் மஞ்சளாகவே தோன்றும் கீழாநெல்லி காணாதவரை…’ எனும் முதுமொழி, சில வகையான காமாலை நோய்க்குக் கீழாநெல்லி சிறந்த மருந்து என்பதை முன்மொழிகிறது. முழுத் தாவரத்தையும் அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவில், மோரில் கரைத்துக் கொடுப்பது, ஈரலுக்கான டானிக். கீழாநெல்லியும் கரிசலாங்கண்ணியும் ஈரலுக்குப் பாதுகாப்பளித்து, காமாலை நோயை மட்டுப்படுத்தப் போராடும் இரட்டையர்கள் என்றால் மிகையல்ல. கல்லீரலுக்கு வலிமையைக் கொடுக்க, கீழாநெல்லி, கரிசாலையை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து பருகும் வழக்கம் நம்மிடையே இன்றும் தொடர்கிறது. எவ்வகையான காமாலை என்பதை அறிந்து, மருத்துவர் ஆலோசனையோடு நோயை அணுகுவது முக்கியம்.

சிறுநீர்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்களை நீக்கவும் கீழாநெல்லி பரிந்துரைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, கீழாநெல்லிப் பொடியோடு நெல்லிக்காய்ப் பொடி சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரலாம். கீழாநெல்லி, மலைவேப்பிலை, மிளகு ஆகியவற்றை மோரில் அரைத்துக் கொடுக்க, மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பேதியைக் கட்டுப்படுத்த, கீழாநெல்லியோடு மாதுளை ஓடு சேர்த்துத் தயிரில் குழைத்துக் கொடுக்கச் சட்டென நிற்கும்.

பித்தத்தைச் சமன்படுத்தி, நோய்களின் அடிப்படையைக் களைய, கீழாநெல்லித் தைலத்தால் தலைமுழுகச் செய்யும் புறமருத்துவ முறை சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படுகிறது. தலை சுற்றல், கை, கால், கண் எரிச்சல் போன்ற குறிகுணங் களுக்குக் கீழாநெல்லித் தைலக் குளியல் ஆத்ம திருப்தி அளிக்கும். வேனிற் காலத்தில் கீழாநெல்லித் தைலத்தைக்கொண்டு தலை முழுகுவதால் கோடைக்காலத் தொந்தரவுகளை வரவிடாமல் தடுக்க முடியும். கீழாநெல்லியை அம்மியிலிட்டு மையாக அரைத்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துத் தலைக்கு முழுகினால், அலைக்கழிக்கப்படும் மனம் நிதானமடையும்.

இதன் இலைகளோடு பாசிப்பயற்று மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கச் சரும நோய்கள் தலை காட்டாது. வெட்டுக் காயங்களுக்குப் பூசவும் கீழாநெல்லிச் சாறு உதவும். தலைபாரத்தை நீக்க, உத்தாமணிச் சாற்றுடன் இதன் சாற்றைச் சேர்த்துத் துளிக் கணக்கில் மூக்கில் நசியமிடும் மருத்துவ முறை சிறப்பான பலன் கொடுக்கும்.

கீழாநெல்லியின் பயன்கள்:

கீழாநெல்லி இலையை மாத்திரையாகவும் செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினரை முழுமையாக குணப்படுத்தலாம். மீதமுள்ள 40 சதவீதத்தினர் தொடர்ந்து கீழாநெல்லியைச் சாப்பிட்டு வருவது அவசியம்.

கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடி, தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும்.

கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.

கீழாநெல்லி 4 அல்லது 5 செடி, சீரகம், ஏலக்காய், திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லிக்காய் 30 கிராம், 4 மிளகுடன் இடித்து 2 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் உடல் சூடு, காய்சல், தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி குழித்தால் பார்வை கோளாறு தீரும்

ரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்குப் பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.

மலைவேல் ஹெர்பல்ஸ்

8883330160
9551653441


Comments

Popular posts from this blog

மலைவேல் ஹெர்பல்ஸ்- பிரண்டையின் நன்மைகள்

மலைவேல் ஹெர்பல்ஸ்- துளசி இலையின் நன்மைகள்

மலைவேல் ஹெர்பல்ஸ்- கொழுஞ்சியின் நன்மைகள்