Posts

Showing posts from January, 2023

மலைவேல் ஹெர்பல்ஸ்- துளசி இலையின் நன்மைகள்

Image
 மூலிகைகளின் அரசி! துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல் அலட்சியப்படுத்தும்.. ஆனால்  துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து! மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண ந...

மலைவேல் ஹெர்பல்ஸ்- கீழாநெல்லியின் நன்மைகள்

Image
  கீழாநெல்லி: மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட பலவிதமான தலையாய பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது. இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும். சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் க...

மலைவேல் ஹெர்பல்ஸ்- கொழுஞ்சியின் நன்மைகள்

Image
கொழுஞ்சி செடி:  கொழுஞ்சிச் செடி பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது. இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு அடி உயரம் கூட வளராத சிறிய செடியான கொழுஞ்சி, சாலையோரங்களில் தானே வளரும் இயல்புடையது. கூட்டு இலைகளுடன் கூடிய நீல வண்ண மலர்களுடன் வெடிக்கும் தன்மையுள்ள காய்களைக் கொண்ட கொழுஞ்சி, வயல் வெளிகளிலும் காணப்படும். சுவாச நோய்களை விரட்டும் : சுவாச நோய்களை விரட்டும் : வேர், பட்டை, விதை மற்றும் இலைகள் மூலம், சிறந்த மருத்துவத் தன்மைகளைக் கொண்ட கொழுஞ்சி செடி, உடலுக்கு, ஊட்டச்சக்தியையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கவல்லது. சுவாச பாதிப்புகளை சரியாக்கி, சளி மற்றும் ஆஸ்துமாவை விரட்டும். குஷ்டம் முதலிய சரும வியாதிகளுக்கு மருந்தாகிறது.  மனிதர்களுக்கு நன்மைகள் தரும் மூலிகைச் செடிகள் எல்லாம் பெரும்பாலும், சாலையோரங்களில், வயல்வெளிகளில் வளர்ந்திருக்கும். அதுபோல வயல் வெளிகளில் வளரும் கொட்டைக் கரந்தை போன்ற கற்ப மூலிகைகளை, அ...

மலைவேல் ஹெர்பல்ஸ்- பிரண்டையின் நன்மைகள்

Image
  பிரண்டை: இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது. அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும...