மலைவேல் ஹெர்பல்ஸ்- துளசி இலையின் நன்மைகள்
மூலிகைகளின் அரசி! துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல் அலட்சியப்படுத்தும்.. ஆனால் துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து! மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண ந...